Payappadaathae En Makalae in F Scale

பயப்படாதே என் மகளே
பயப்படாதே என் மகளே
பிரியமானவளே நீ பயப்படாதே
பிரியமானவளே நீ சோர்ந்து போகாதே
பிரச்சனைகள் உன்னை சூழ்ந்தாலும்
உன் சத்துருக்கள் உனக்கு விரோதமாய்
உன் வழியாய் இன்று வந்தாலும்
ஏழு வழியாக ஓடிப்போவார்கள்
உன் கண்களாலே நீ காண்பாய்
உனக்கு விரோதமாய் எழுப்புமாயுதம்
வாய்க்காதே போகச் செய்வேன்
உன்னோடு கூட இருந்து நானும் செய்திடும்
காரியங்கள் பயங்கரமாய் இருக்கும்
உன்னை ஆசீர்வதிக்கிறேன் ஆசீர்வதிப்பேன்
உன்னை பெறுகிறேன் பெருகச்செய்வேன்
என் பிரசன்னத்தால் உன்னை நிரப்புவேன்
என் கரங்களால் உன்னை மூடுவேன்
நீ என்னோடு கூட நடப்பாய் என் பிள்ளையாய்
இருதயத்தில் ஒளிரச் செய்வாய்
உனக்காக ஒரு பந்தியை ஆயத்தமாக
வைத்திருக்கிறேன்
உன்னோடு கூட இருந்து நானும் செய்திடும்
காரியங்கள் பயங்கரமாய் இருக்கும்
நீ தண்ணீர் கடக்கும் போது பயப்படாதே
சோதனை வரும் போது சோர்ந்து போகாதே
கன்மலை வெடிப்பிலே பாதுகாப்பேன்
என் கரத்தின் விரல்களினால் மூடுகின்றேன்
புதிய காரியம் இன்று செய்வேன்
இன்றைக்கே நீ அதை காண்பாய்
உன் விருப்பமெல்லாம் நிறைவேற்றுவேன்
இரட்டிப்பான நன்மை காண்பாய்
உன்னோடு கூட இருந்து நானும் செய்திடும்
காரியங்கள் பயங்கரமாய் இருக்கும்


Payappadaathae En Makalae Chords for Keyboard, Guitar and Piano

Payappadaathae En Makalae Chords in F Scale

தமிழ்