Ontay Sernthu Paaduvom in D♯ Scale

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம்
மன்னவனை வாழ்த்துவோம்
விண்ணும் மண்ணும் போற்றும்
நல்ல தேவன் அவர்
வாழ்வின் பாதை மாற்றவே
ஒளியாய் உலகில் வந்தாரே
வானாதி வானம் போற்றும்
கர்த்தர் அவர்
ஏழ்மைக் கோலமாய் அவதரித்தார்
தாழ்மை என்னவென்று கற்றுத்தந்தார்
தம் வாழ்வை மாதிரியாய் காட்டித்
தந்த தேவன் ஒருவர் ஒருவரே
நம் வாழ்வை இனிதாக மாற்ற வல்ல
இரட்சகரும் அவரே
அன்பின் மாதிரியானவர்
அழகில் என்றென்றும் சிறந்தவர்
உலகின் பாவம் போக்கும் இரட்சகர்
இன்று பிறந்தார்
—ஒன்றாய்
தூதர்கள் சூழ்ந்து பாடிட
மேய்ப்பர்கள் வந்து பணிந்திட
வானோர் போற்றும் உன்னதர்
இன்று பிறந்தார்
—ஒன்றாய்


Ontay Sernthu Paaduvom Chords for Keyboard, Guitar and Piano

Ontay Sernthu Paaduvom Chords in D♯ Scale

தமிழ்