Nerukkati Vaelaiyil Pathilaliththu in G♯ Scale

நெருக்கடி வேளையில் பதிலளித்து
பாதுகாத்து நடத்திடுவார்
உன்னோடு இருந்து ஆதரித்து
தினமும் உதவிடுவார்
நீ செலுத்தும் காணிக்கைகள்
நினைவு கூர்ந்திடுவார்
நன்றி பலி அனைத்தையுமே
பிரியமாய் ஏற்றுக்கொள்வார்
உன் மனம் விரும்புவதை
உனக்குத் தந்திடுவார்
உனது திட்டங்களெல்லாம்
நிறைவேற்றி முடித்திடுவார்
உனக்கு வரும் வெற்றியைக் கண்டு
மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
நம் தேவன் நாமத்திலே
வெற்றிக் கொடி நாட்டிடுவோம்
இரதங்களை நம்பும் மனிதர்
இடறி விழுந்தார்கள்
தேவனை நம்பும் நாமோ
நிமிர்ந்து நின்றிடுவோம்


Nerukkati Vaelaiyil Pathilaliththu Chords for Keyboard, Guitar and Piano

Nerukkati Vaelaiyil Pathilaliththu Chords in G♯ Scale

தமிழ்