இயேசுவே! கல்வாரியில்
என்னை வைத்துக்கொள்ளும்
பாவம் போக்கும் இரத்தமாம்
திவ்ய ஊற்றைக் காட்டும்
மீட்பரே! மீட்பரே!
எந்தன் மேன்மை நீரே!
விண்ணில் வாழுமளவும்
நன்மை செய்குவீரே!
பாவியான் கல்வாரியில்
இரட்சிப்பைப் பெற்றேனே
ஞான ஜோதி தோன்றவும்
கண்டு பூரித்தேனே
–மீட்பரே!
இரட்சகா! கல்வாரியின்
காட்சி கண்டோனாக
பக்தியோடு ஜீவிக்க
என்னை ஆள்வீராக
–மீட்பரே!
நேசரே கல்வாரியில்
நீசன் என்னை கண்டேன்
இன்னல் நீக்கும் நாதனாய்
இரத்தம் சிந்தி மாண்டீர்
—மீட்பரே!
இன்னமும் கல்வாரியில்
ஆவலாய் நிற்பேனே
பின்பு மோட்ச லோகத்தில்
என்றும் வாழுவேனே
–மீட்பரே!
தேவனே கல்வாரியில்
உண்மையை கண்டேனே
என்னை மீட்கும் மீட்பராய்
துன்பம் சகித்தீரே
–மீட்பரே!
Meetparae! Meetparae! Chords for Keyboard, Guitar and Piano