Kurusinmael Kurusinmael in F Scale

குருசின்மேல் குருசின்மேல்
காண்கின்ற தாரிவர் B
பிராண நாதன் பிராண நாதன்
என் பேர்க்காய் சாகின்றார் (2)
இந்த மா நேசத்தை நிந்தையாய் தள்ளினேன்
தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ
…குருசின்மேல்
பாவத்தின் காட்சியை ஆத்மாவே பார்த்திடாய்
தேவ குமாரன் மா சாபத்தி லாயினார்
…குருசின்மேல்
கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்
குருசினின் காட்சியை தரிசித்து தேறுவேன்
…குருசின்மேல்
சூறாவளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில்
சிலுவையின் நேசத்தை சிந்தித்து நோக்குவேன்
…குருசின்மேல்
இம்மகா நேசத்தை ஆத்மாவே சிந்திப்பாய்
இம்மானுவேலே நீர் என்னையும் நேசித்தீர்
…குருசின்மேல்


Kurusinmael Kurusinmael Chords for Keyboard, Guitar and Piano

Kurusinmael Kurusinmael Chords in F Scale

தமிழ்