ஜீவனுள்ள தேவனே
உம்மை தொழுகிறோம்
என் வாழ்வில் நீர் செய்த நன்மைகள்
அவை எண்ணி முடியாதவை
உம்மையே ஆராதிப்போம்
உண்மையாய் ஆராதிப்போம்-2
ஆவியோடும் உண்மையோடும்
என்றென்றும் ஆராதிப்போம்-2
—உம்மையே
பகலில் மேகஸ்தம்பமாய்
இரவில் அக்கினிஸ்தம்பமாய்
பாதுகாத்து நடத்தி வந்தீர்
இனியும் நடத்திடுவீர்
–உம்மையே
உந்தன் வலது கரத்தினால்
என்னையும் தாங்கி நடத்தினீர்
உமது கிருபையை அனுதினமும்
தந்து நடத்திடுவீர்
—–உம்மையே
நேசரே உந்தன் நேசத்தால்
என்னையும் இழுத்துக் கொண்டீரே
உம்மை விட்டு விலகிடேன் நான்
உமக்காய் வாழ்ந்திடுவேன்
—உம்மையே
Jeevanulla Thaevanae Chords for Keyboard, Guitar and Piano