Immattum Kaividaa Thaevan Chords

இம்மட்டும் கைவிடா தேவன்
இனியும் கைவிட மாட்டார்
தாயின் வயிற்றில் தாங்கினார்
ஆயுள் முழுதும் தாங்குவார்
தாங்குவார் தப்புவிப்பார்
ஏந்துவார் என் தெய்வம்
ஆயன் இயேசு ஆடு நான்
ஆதலால் பயமில்லை
சாத்தான் பறிக்க முடியாது
சபிக்கின்றேன் இயேசு நாமத்தில்
-தாங்குவார்
இயேசு கிறிஸ்து வசனத்தால்
எல்லா நாளும் சந்தோஷம்
வியாதி வறுமை வேதனை
எது தான் பிரிக்க முடியுமோ?
-தாங்குவார்
கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்
கலக்கம் எனக்கும் இனியில்லை
துதித்து துதித்து நாளெல்லாம்
துரத்திடுவேன் சத்துருவை
-தாங்குவார்


Immattum Kaividaa Thaevan Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்