எந்தன் நெஞ்சம் எந்தன் நெஞ்சம்
உம்மில் வாஞ்சை கொண்டு வாடுதே
எந்தன் உள்ளம் எந்தன் உள்ளம்
உம்மில் தாகம் கொண்டு பாடுதே
எந்தன் கண்கள் உம்மைக் காணும்
அந்த நாளை எண்ணி ஏங்குதே
எந்தன் நாவும் உம்மை போற்றும்
நல்ல பாடல் பாட சொல்லுதே
என் ஜீவன் பெரிதல்லவே
நாதா உம் கிருபை விளங்க
எந்நாளும் எந்தன் உதட்டில்
உம் நாமம் பிறந்திடுமே(2)
உந்தனின் திரு சித்தமே
வாழ்வெல்லாம் நினைவானதே
நித்தமும் திரு வார்த்தையால்
ஆத்துமா ஆனந்திக்குமே
— எந்தன் கண்கள்
சோர்ந்திடும் நேரத்திலுமே
ஸ்தோத்திர கரம் எடுப்பேன்
நடு நிசி நேரம் ஆனாலும்
நாதா உம் பாதம் பணிவேன்
என்றும் துணையானீரே
ராப்பகல் உம் நினைவே
அடிமையை உம் பாதையில்
அனுதினம் நடந்திடுமே!
— எந்தன் கண்கள்
Enthan Nenjam Chords for Keyboard, Guitar and Piano