Aaththumaavae Sthoththiri in A Scale

ஆத்துமாவே ஸ்தோத்திரி
முழு உள்ளமே ஸ்தோத்திரி
ஜீவனுள்ள தேவனைத் துதி
ஆத்துமாவே ஸ்தோத்திரி
முழு உள்ளமே ஸ்தோத்திரி
ஜீவனுள்ள தேவனைத் துதி
அல்லேலூயா….
ஒன்று இரண்டு என்றல்ல
தேவன் தந்த நன்மைகள்
கோடா கோடா கோடி ஆகுமே-2
ஒன்று இரண்டு என்றல்ல
நீ செலுத்தும் நன்றிகள்-கோடா
கோடா கோடியாகட்டும்
அல்லேலூயா
—ஆத்துமாவே
நாட்டில் உள்ள மக்களே
பூமியின் குடிகளே
என்னுடன் தேவனைத் துதியுங்கள்
கூட்டில் உள்ள பறவைபோல்
சிக்கிக் கொண்ட நம்மையே-விடுவித்த
தேவனை துதியுங்கள்
அல்லேலூயா
—ஆத்துமாவே
நானும் என் வீட்டாருமோ
போற்றுவோம் ஆராதிப்போம்
இயேசுவை என்றுமே சேவிப்போம்
எங்கள் பாவம் மன்னித்தார்
எங்கள் தேவை சந்தித்தார்- வருகை
வரை நடத்திச் செல்லுவார்
அல்லேலூயா
—ஆத்துமாவே


Aaththumaavae Sthoththiri Chords for Keyboard, Guitar and Piano

Aaththumaavae Sthoththiri Chords in A Scale

தமிழ்