ஆனந்தமே பரமானந்தமே இயேசு
அண்ணலை அண்டினோர்க்காந்தமே
ஞான இரட்சகரென் பாவம் மன்னித்ததால்
ஆனேன் அவருக்குள் ஆனந்தமே)
இந்தப் புவி ஒரு சொந்தமல்லவென்று
இயேசு என் நேசா மொழிந்தனரே
இக்கட்டு துன்பமும் இயேசுவின் தொண்டர்க்கு
இங்கேயே பங்காய் கிடைத்திடினும்
—ஆனந்தமே
கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையே
காரணமின்றி கலங்கேனே யான்
விசுவாச பேழையில் மேலோகம் வந்திட
மேவியே சுக்கான் பிடித்திடுமே
—ஆனந்தமே
என்னுள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்
கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது
சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்
ஜெயகீதம் பாடி மகிழ்ந்திடலாம்
—ஆனந்தமே
கூடார வாசிகளாகும் நமக்கிங்கு
வீடென்றும் நாடென்றும் சொல்லலாமோ
கைவேலையல்லாத வீடொன்றை மேலே
தான் செய்வேன் எனச்சொல்லி போகலையோ
—ஆனந்தமே
துன்பங்கள் தொல்லை இடுக்கண் இடர் இவை
தொண்டர் எமை அண்டி வந்திடினும்
சொல்லி முடியாத ஆறுதல் கிருபையை
துன்பத்தினூடே அனுப்பிடுவார்
—ஆனந்தமே
இயேசுவே சீக்கிரம் இத்தரை வாருமேன்
ஏழை வெகுவாய் கலங்குகிறேன்
என் நேசர் தம்முக ஜோதியேதேயல்லாம்
இன்பம் தரும் பொருள் ஏதமில்லை
—ஆனந்தமே
Aananthamae Paramaananthamae Yesu Chords for Keyboard, Guitar and Piano