துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு
உன்னதரே உம்மில் மகிழ்ந்து
களிகூர்கின்றேன் தினமும்
முழு இதயத்தோடு துதித்திடுவேன்
முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன்
– முழு இதயத்தோடு
ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே
நெருக்கடி வேளையில் புகலிடமே
அடைக்கலமே புகலிடமே
– முழு இதயத்தோடு
நாடித் தேடி வரும் மனிதர்களை
டாடி (Daddy) கைவிடுவதேயில்லை
ஒரு போதும் கைவிடமாட்டீர் – முழு
– துதித்திடுவேன்
வறியவர்கள் மறக்கப்படுவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை – முழு
– முழு இதயத்தோடு
உமது திருநாமம் அறிந்தவர்கள்
உம்மை நம்பி தினம் துதிப்பார்கள்
களிகூர்ந்து மகிழ்வார்கள் – தினம்
– முழு இதயத்தோடு
Thuthiththiduvaen Mulu Ithayaththodu Chords for Keyboard, Guitar and Piano