Thuthikalin Paaththiranae in D♯ Scale

துதிகளின் பாத்திரனே
துதிதனை ஏந்தி நின்றோம்
தூயாவி அருள் தாருமே
துதிகளின் பாத்திரனே
கடந்த எம் நாட்களெல்லாம்
கருணையாய் நடத்தினாரே
கருத்துடன் மா தயவை
கனிவுடன் பாடிடுவோம்
…துதிகளின்
ஆபத்து நாளினிலே
ஏற்ற சகாயம் நீரே
அதிசயம் செய்பவரே
துதிகளை செலுத்துகின்றோம்
…துதிகளின்
முற்றுமாய் பலியாகவே
அப்பணித்தோம் எம்மையே
ஆளுகை செய்திடுவீர்
ஆசீரை அளித்திடுவீர்
…துதிகளின்
மகிமையின் விண்ணரசர்
மகத்துவ தேவனவர்
மகிமையாம் கனமதனை
மகிழ்வுடன் செலுத்துகின்றோம்
…துதிகளின்


Thuthikalin Paaththiranae Chords for Keyboard, Guitar and Piano

Thuthikalin Paaththiranae Chords in D♯ Scale

தமிழ்