Kalvaariyil Aeka Suthan in F Scale

கல்வாரியில் ஏக சுதன்
தொங்கியே மாண்டனரே
அழகுற்றோராய் தேவ மைந்தன்
அந்த கேடடைந்தார்
குற்றமில்லாத கர்த்தனாம் இயேசு
பாவங்கள் ஏற்றவராம்
என் தேவனே கைவிட்டீரே
கதறும் காட்சியிலே
– கல்வாரியில்
மெய்யான பானம் மெய்யான போஜனம்
நித்திய ஜீவன் இவர்
என்றென்றுமாய் பிள்ளைப் பெற
பந்தியில் பங்கடைவோம்
– கல்வாரியில்
சரீரமான சபையில் நம்பி
அன்போடு இணைத்தாரே
கர்த்தர் பிரான் ஒப்பந்தம் செய்த
இயேசுவை பின்பற்றுவோம்
– கல்வாரியில்


Kalvaariyil Aeka Suthan Chords for Keyboard, Guitar and Piano

Kalvaariyil Aeka Suthan Chords in F Scale

தமிழ்