Anpu Niraintha Pon Yesuvae in E Scale

அன்பு நிறைந்த பொன் இயேசுவே
உம் பாத சேவை என் ஆசையே
ஜீவனற்ற பாவி என்னில்
ஜீவனை ஈந்த என் இயேசுவே
உம்மை விட மண்ணில் வேறே
நேசிப்பதில்லை நான் யாரையும்
–அன்பு நிறைந்த
என்னுள்ளத்தில் வாசம் செய்யும்
மகிமையின் நம்பிக்கையே
நீர் வளர்ந்தும் நான் குறைந்தும்
ஒன்று மாத்ரம் எந்தன் ஆசையே
–அன்பு நிறைந்த
இவ்வுலகில் கண்ணீருடன்
உம் வசனம் விதைக்கின்றேன்
அன்று நேரில் உம் அருகில்
வந்து பலங்களை நான் காண்பேனே
–அன்பு நிறைந்த
உன்னதத்தை விட்டிறங்கி
மண்ணில் வந்த என் நாதனே
உம் அடிமை உம் மகிமை
ஒன்று மாத்ரம் எந்தன் ஆசையே
–அன்பு நிறைந்த
பாவ்ச் சேற்றில் மோசம் போன
என்னையும் தேடி வந்தீரே
நன்றியினால் எந்தனுள்ளம்
பொங்கி வழியுதே நல்ல நாதா
—-அன்பு நிறைந்த


Anpu Niraintha Pon Yesuvae Chords for Keyboard, Guitar and Piano

Anpu Niraintha Pon Yesuvae Chords in E Scale

தமிழ்