Uyirththeluthalin in A♯ Scale

உயிர்த்தெழுதலின் நாள்தனில் கூடிவந்தோம்
புது புது பாடல்கள் பாடிவந்தோம்
புது புது அதிசயம் காண வந்தோம்
உயிர்த்தெழுதலின் நாள்தனில் கூடிவந்தோம்
புது புது அபிஷேகம் நாடி வந்தோம்
புது புது கிருபைகள் தேடி வந்தோம்
கர்த்தரின் சத்தமே என்றும்
செவி கொடுப்பேன்
வேதத்தின்வார்த்தையே என்றும் கீழ்ப்படிவேன்
தேசத்தின் மேய்ப்பனாய் என்றும்
வாழ்ந்திடுவேன்
கர்த்தரின் ஆசியே சூழ மகிழ்ந்திடுவேன்
பட்டணத்தில் என்றென்றும் ஆசீர்வாதம்
வீடுகளில் என்றென்றும் ஆசீர்வாதம்
நிலங்களில் என்றென்றும் ஆசிர்வாதம்
—புது புது
தேசத்தில் காலத்தில் மழை நிச்சயம் உண்டு
வாழ்விலும் உயர்வுமே என்றென்று மெனக்குண்டு
கையிடும் வேலையில் வெற்றி நிச்சயமுண்டு
யுத்தங்களின் ஜெயமே என்றென்று மெனக்குண்டு
பொக்கிஷமும் என்றென்றும் திறந்திடும்
களஞ்சியங்கள் என்றென்றும் நிறைந்திடும்
கனிகளும் என்றென்றும் பலுகிடும்
—புது புது


Uyirththeluthalin Chords for Keyboard, Guitar and Piano

Uyirththeluthalin Chords in A♯ Scale

தமிழ்