உலகத்தின் தோற்றத்தின்
முன் என்னை கண்டீர்
தாயின் கருவின் உள்ளே
என்னை நீர் நிரைத்தீர்
வளர்கின்ற பிராயத்தில்
கூடவே இருந்தீர்
சிந்தையில் முழுவதிலும்
நிறைந்து வந்தீர்
நீர் இன்றி யாருமில்லை
உம்மை நினைக்காத நாளே இல்லை
சுவாசிக்கும் காற்றிலும் நீரே
ஒவ்வொரு மூச்சிலும் நீரே
என் ஆசை எல்லாம் நீரே
என் ஆறுதலும் நீரே
என் ஆசை எல்லாம் நீரே
என் ஆறுதலும் நீரே
வாழ்கின்ற வாழ்க்கையின்
அர்த்தமும் நீரே
இதயத்தின் ஏக்கத்தை
தீர்ப்பவர் நீரே
சாதிப்பதெல்லாம்
உம் கிருபையினாலே
உயர்விற்கும் வாழ்விற்கும் காரணரே
…நீர் இன்றி யாருமில்லை
Ulakaththin Thottaththin Chords for Keyboard, Guitar and Piano