Thaevan Varukintar in E♭ Scale

E♭ = D♯

அந்த நாள் நெருங்கிடுதே
ஆயத்தமாகியே பறந்திடுவோம்
இந்த வனாந்திர யாத்திரை முடித்து
இயேசுவுடன் நிதம் வாழ்ந்திடுவோம்
தேவன் வருகின்றார் வேகமாய் வருகின்றார்
கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
பக்தரிகள் யாவரும் விழித்திருப்போம்
திருடனை போல் அவர் வருகை
தீவிரமாய் மிக நெருங்கிடுதே
ஆயத்தமில்லா அவனியில் உள்ளோர்
அழுது புலம்பி கதறுவாரே
…தேவன் வருகின்றார்
இருள் சூழும் வேளை நெருங்கிடுதே
இனிவரும் காலமோ நமக்கு இல்லை
பூரணராக கடந்திடுவோம் நாம்
பரனோடு நித்தியம் வாழ்ந்திடுவோம்
…தேவன் வருகின்றார்
மணவாளன் தட்டும் குரல்கேட்டு
மகிமையில் நாமும் சேர்ந்திடுவோம்
பரிசுத்த ஆவியின் நிறைவுடன் வாழ்ந்து
பரமனின் ராஜ்ஜியம் சேர்ந்திடுவோம்
…தேவன் வருகின்றார்
நினையா வேளையில் வந்திடுவார்
நித்திரை மயக்கம் களைந்திடுவோம்
நீதியில் ராஜனை முகமுகமாய் நாம்
நித்தியமாக தரிசிப்போமே
…தேவன் வருகின்றார்


Thaevan Varukintar Chords for Keyboard, Guitar and Piano

Thaevan Varukintar Chords in E♭ Scale

தமிழ்