ஜீவனுள்ள தேவனே வாரும்
ஜீவ பாதையிலே நடத்தும்
ஜீவ தண்ணிர் ஊறும் ஊற்றிலே
ஜீவன் பெற என்னை நடத்தும்
தேவனே நீர் பெரியவர் பெரியவர்
தேவனே நீர் பரிசுத்தர் பரிசுத்தர்
தேவனே நீர் நல்லவர் நல்லவர்
தேவனே நீர் வல்லவர் வல்லவர்
…. ஜீவ தண்ணிர்
பாவிகள் துரோகிகள் ஜயா
பாவ ஆகஅம் மக்க்ளே தூயா
பாதகர் எம் பாவம் போக்கவே
பாதகன் போல் தொங்கினீரல்லோ
…தேவனே நீர்
ஜந்து கண்ட மக்களுக்காக
ஜந்து காயமேற்ற நேசரே
நொந்துருகி வந்த மக்கள் மேல்
நேச ஆவி வீசச் செய்குவீர் – இன்று
…தேவனே நீர்
வாக்கு தத்தம் செய்த கர்த்தரே
வாக்கு மாறா உண்மை நாதனே
வாக்கை வந்து நம்பி நிற்கிறோம்
வல்ல ஆவி மாரி ஊற்றுவீர் - உந்தன்
…தேவனே நீர்
நியாயந் தீர்ப்பின் நாள் நெருங்குதே
நேசர் வர காலமாகுதே
மாயலோகம் நம்பி மாண்டிடும்
மானிடரை மீட்க மாட்டிரோ – இந்த
…தேவனே நீர்
Jeevanulla Thaevanae Vaarum Chords for Keyboard, Guitar and Piano