Aaviyai Arulumae Suvaami in D♯ Scale

ஆவியை அருளுமே சுவாமி
எனக்காய் உயிர் கொடுத்த வானத்தினரசே!
நற்கனி தேடிவரும் காலங்களல்லவோ
நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ
முக்கனி முகங்காணா வெம்பயிரல்லவோ -2
முழு நெஞ்சம் விளைவற்ற உவர் நிலமல்லவோ
…ஆவியை
பாவிக்கு ஆவியின் கனியெனும் சிநேகம்
பரம சந்தோஷம், நீடிய சாந்தம்
தேவ சமாதானம், நற்குணம், தயவு,
திட விசுவாசம் சிறுதெனுமில்லை
…ஆவியை
தீபத்துக் கெண்ணெயை சீக்கிரமூற்றும்
திரி யவியாமலே தீண்டியே யேற்றும்
பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்
பரிசுத்த வரந்தந்தென் குறைகளைத் தீரும்
…ஆவியை


Aaviyai Arulumae Suvaami Chords for Keyboard, Guitar and Piano

Aaviyai Arulumae Suvaami Chords in D♯ Scale

தமிழ்