Aar Ivar Aaraaro Chords

ஆர் இவர் ஆராரோ – இந்த
அவனியோர் மாதிடமே – ஆனடை குடிலிடை
மோனமாயுதித்த இவ்வற்புத பாலகனார்
பாருருவாகு முன்னே இருந்த
பரம்பொருள் தானிவரோ?
சீருடை புவி வான், அவை பொருள்
யாவையும் சிருஷ்டித்த மாவலரோ?
மேசியா இவர் தானோ?
நம்மை மேய்த்திடும் கோனோ
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும்
அதி அன்புள்ள மனசானோ?
தித்திக்கும் தீங்கனியோ?
நமது தேவனின் கண்மணியோ?
மெத்தவே உலகிருள் நீக்கிடும்
அதிசய மேவிய விண்ணொளியோ?
பட்டத்து துரை மகனோ?
நம்மை பண்புடன் ஆழ்பவனோ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும்
மன்னிப்பு காட்டிடும் தாயகனோ?
ஜீவனின் அப்பமோ தான்?
தாகம் தீர்த்திடும் பானமோ தான்?
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும்
அடைக்கல மானவரிவர் தானோ?


Aar Ivar Aaraaro Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்