Yesu Enta Thiru Naamaththirku in F Scale

இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்
வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமமது
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது
….இயேசு என்ற
வேதாளம், பாதாளம் யாவையும் ஜெயித்த
வீரமுள்ள திரு நாமமது
நாமும் வென்றிடுவோமிந்த நாமத்திலே – 2
….இயேசு என்ற
பாவத்திலே மாளும் பாவியை மீட்க
பாரினில் வந்த மெய் நாமமது
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது - 2
….இயேசு என்ற
உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்
உன்னத தேவனின் நாமமது
உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது
….இயேசு என்ற
ச சலம் வருத்தம் சோதனன நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது
தடை முற்றுமகற்றிடும் நாமமது
….இயேசு என்ற


Yesu Enta Thiru Naamaththirku Chords for Keyboard, Guitar and Piano

Yesu Enta Thiru Naamaththirku Chords in F Scale

தமிழ்