Ummil Naan Vaalkiraen in C♯ Scale

உம்மில் நான் வாழ்கிறேன்
உமக்குள்ளே வளர்கிறேன்
ஜீவத்தண்ணீராம் உமக்குள்ளே
வேர் கொண்டு வளரும் மரம் நானே
படர்ந்திடுவேன் நிழல் தருவேன்
பறவைகள் தங்கும் வீடாவேன்
அடித்தளம் இரட்சகர் இயேசுவின் மேல்
அமைந்து உயரும் கட்டடம் நான்
பெருங்காற்று அசைப்பதில்லை
பெருமழையோ பிரிப்பதில்லை
இயேசுவே எனது தலையானீர்
நானோ உமது உடலானேன்
உம் நினைவு என் உணவு
உம் விருப்பம் என் ஏக்கம்
செடியான உம்மோடு இணைந்துவிட்டேன்
கொடியாய் படர்ந்து கனி தருவேன்
இலைகளெல்லாம் மருந்தாகும்
கனிகளெல்லாம் விருந்தாகும்
உமது வார்த்தைகள் எனக்குள்ளே
உந்தன் ஆவி என்னோடே
மீட்பளிக்கும் நறுமணம் நான்
கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வேன்


Ummil Naan Vaalkiraen Chords for Keyboard, Guitar and Piano

Ummil Naan Vaalkiraen Chords in C♯ Scale

தமிழ்