Ummaippol Yaarunndu in D♭ Scale

D♭ = C♯

உம்மைப்போல் யாருண்டு
எந்தன் இயேசு நாதா இந்தப்
பார்தலத்தில் உம்மைப்போல் யாருண்டு?
பாவப் பிடியினில் சிக்கி நான் உழன்றேன்
தேவா தம் அன்பினால் மன்னித்தீர்
பாவப் பிடியினில் சிக்கி நான் உழன்றேன்
தேவா தம் அன்பினால் மன்னித்தீர்
உலகம் மாமிசம்பி சாசுக்கடியில்
அடிமையாகவே பாவி நான் ஜீவித்தேன்
நிம்மதி இழந்தேன் தூய்மையை மறந்தேன்
மனம்போல் நடந்தேன் ஏமாற்றம் அடைந்தேன்
என்னை யா தேடினீர் ஜயா,
இயேசு நாதா உம்மை
மறந்த ஒர்துரோகி நான்
என்னை யா தேடினீர் ஜயா, இயேசு நாதா
அடிமை உமக்கே இனி நான்
…உம்மைப்போல்
இன்றைக்கு நான் செய்யும் இந்தத் தீர்மானத்தை
என்றைக்கும் காத்திட ஆவியால் நிரப்பும்
நொறுக்கும், உருக்கும் , உடையும் வனையும்
உமக்கே உகந்த தூய சரீரமாய்
ஜம்பொறிகளையும் உமக்குள் அடக்கும்
இயேசுவே ஆவியால் நிரப்பும்
வெற்றி வாழ்க்கையுள்ள மகளாய் திகழ
அக்கினி என்னுள்ளம் இறங்கும்
…உம்மைப்போல்


Ummaippol Yaarunndu Chords for Keyboard, Guitar and Piano

Ummaippol Yaarunndu Chords in D♭ Scale

தமிழ்