Thaevanai Uyarththith Thuthiyungal in A Scale

தேவனை உயர்த்தித் துதியுங்கள்
அவர் நாமத்தைப் போற்றியே
தேவனை உயர்த்தி துதியுங்கள்
தேவனின் செயல் அதிசயமென்று
அதிசயமென்று சொல்லி-நம்
கொடியவரின் சீறல் கடுமையாய் வரினும்
திட பெலனும் ஏழைக்கடைக்கலமுமானார்
படும் பலவந்தர் ஆரவாரம் என்றும்
ஆரவாரம் என்றுமே --தேவனை
கர்த்தரையே நம்பி சத்தியம் கைக்கொண்ட
உத்தம ஜாத்யே உட்பிரவேசியுங்கள்
பக்தருக்கென்று பலத்த நகரம்
பலத்த நகரம் உண்டு-–தேவனை
புனிதராய் மரித்தோர் பூரித்தெழும்பிடுவார்
பனிபோல் கிருபையை பக்தரின் மேல் பொழிவார்
இனி உலகத்தில் இன்னல் பெருகிடும்
இன்னல் பெருகிடுமே–-தேவனை
சிறந்த விருந்தொன்று சீயோன் மலையின் மீது
அருந்த யாவர்க்கும் ஆயத்தமாக்குவார்
நிந்தையை நீக்கிக் கண்ணீரைத் துடைத்துக்
கண்ணீரைத் துடைத்திடுவார்–தேவனை


Thaevanai Uyarththith Thuthiyungal Chords for Keyboard, Guitar and Piano

Thaevanai Uyarththith Thuthiyungal Chords in A Scale

தமிழ்