ராஜாதி ராஜாவாக
அரசாளும் தேவனே
உம்மை போன்ற
தேவன் இல்லை
உம்மை போன்ற
கர்த்தர் இல்லை
ராஜ்யம், வல்லமை,
மாட்சிமை உமதே
உலகில் உள்ள யாவற்றிற்கும்
சொந்தக்காரரே
நதிகள் கூட கைகள் தட்டி
உம்மை பாடுதே
…ராஜ்யம்
நீதியுள்ள ராஜாவாக
ஆளும் தெய்வமே
இரக்கம், உருக்கம் தயவு யாவும்
உம்மில் தான் உண்டே
…ராஜ்யம்
பாவம் போக்க பாலகனாக
மண்ணில் வந்தவரே
உலகை ஆளும் ராஜாவாக
மீண்டும் வருவீரே
கண்ணீர் கவலை கஷ்டம்
யாவும் நீக்கி போட்டீரே
சந்தோஷமும் சமாதானமும்
நிறைவாய் தந்தீரே
…ராஜ்யம்
ராஜாதி ராஜா இயேசுவே
கர்த்தாதி கர்த்தர் இயேசுவே
தேவாதி தேவன் இயேசுவே
மன்னாதி மன்னன் இயேசுவே
மண்ணில் வந்தவர் இயேசுவே
மரணத்தை வென்றவர் இயேசுவே
பரலோகம் சென்றவர் இயேசுவே
மீண்டும் வருவாரே இயேசுவே
Raajaathi Raajaavaaka Chords for Keyboard, Guitar and Piano