பாவியாகவே வாறேன்
பாவம் போக்கும் பலியாம்
என் இயேசுவே வாறேன்
பாவியாகவே வாறேன்
பாவக்கறை போமோ என்
பாடாய் உன் பாட்டாலன்றி
போவதில்லை என்றே
பொல்லாத பாவியே நான்
…பாவியாகவே
நீ வா உன் பாவம் என்னால்
நீங்கும் என்று சொன்னீரே –
தேவா உன் வாக்கை நம்பி
சீர்கேடன் நீசனும் நான்
…பாவியாகவே
பேய்மருள் உலகுடல்
பேராசையால் மயங்கிப் –
போயும் அவற்றோடு
போரில் அயர்ச்சியாய் நான்
…பாவியாகவே
ஜீவ செல்வ ஞான சீல
சுகங்கள் அற்றேன்
தாவென்று வேண்டிய
சாவில் சஞ்சரித்த நான்
…பாவியாகவே
துன்பங்கள் நீக்கி உன்னைத்
தூக்கி அணைப்பேன் என்றீர்
இன்ப வாக்குத்தத்தத்தை
இன்றைக்கே நம்பியே நான்
…பாவியாகவே
Paaviyaakavae Vaaraen Chords for Keyboard, Guitar and Piano