Naan Naanaakavae in A♯ Scale

நான் நானாகவே வந்திருக்கிறேன்
உம் பிரசன்னத்தில் வந்திருக்கிறேன்
நீர் இன்று என்னை ஏற்றுக்கொள்வீரா
உம் ராஜ்யத்தில் சேர்த்துக் கொள்வீரா
யோசேப்பைப் போல் நான்
ஒழுங்கில்லையே – நோவாவை
போல் நீதிமானும் இல்லையே
ஆபிரகாமைப் போல் விசுவாசி இல்லையே
தானியேலைப் போல் உம்மை
வேண்டவில்லையே
நான் நானாக தானாக வந்திருக்கிறேன்
…நான் நானாகவே
மார்த்தாளைப் போல் உம்மை
சேவிக்கலையே – மரியாளைப்
போல் உம்மை நேசிக்கலையே
எஸ்தரைப் போல எதையும் செய்யவில்லையே
எலிசபெத்தின் நற்குணங்கள்
என்னில் இல்லையே
நான் நானாக தானாக வந்திருக்கிறேன்
…நான் நானாகவே


Naan Naanaakavae Chords for Keyboard, Guitar and Piano

Naan Naanaakavae Chords in A♯ Scale

தமிழ்