கலங்கின நேரங்களில் கை தூக்கி
எடுப்பவரே
கண்ணீரின் பள்ளத்தாக்கில்
என்னோடு இருப்பவரே – 2
உறவுகள் மறந்தாலும் நீர் என்னை
மறப்பதில்லை
காலங்கள் மாறினாலும்
நீர் மட்டும் மாறவில்லை – 2
நீங்க தான்பா எங்க நம்பிக்கை
உம்மை அன்றி வேறு
துணை இல்லை — 2
தேவைகள் ஆயிரம்
என்முன் இருப்பினும்
சோர்ந்து போவதில்லை
என்னோடு நீர் இருக்க – 2
தேவையைக் காட்டிலும்
பெரியவர் நீரல்லோ
நினைப்பதை பார்க்கிலும்
செய்பவர் நீரல்லோ – 2
… நீங்க தான்பா
மனிதனின் தூஷணையில்
மனமடிவடைவதில்லை
நீர் எந்தன் பக்கம் உண்டு
தோல்விகள் எனக்கு இல்லை – 2
நாவுகள் எனக்கெதிராய்
சாட்சிகள் சொன்னாலும்
வாதாட நீர் உண்டு ஒரு போதும்
கலக்கம் இல்லை – 2
… நீங்க தான்பா
Kalangina Naerangalil Chords for Keyboard, Guitar and Piano