Amos 6 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ⁽“சீயோன் குன்றின்மீது இன்பத்தில்␢ திளைத்திருப்போரே!␢ சமாரியா மலைமேல்␢ கவலையற்றிருப்போரே!␢ மக்களினங்களுள் சிறந்த இனத்தின்␢ உயர்குடி மக்களே!␢ இஸ்ரயேலின் மக்கள்␢ தேடி வருமளவுக்குப்␢ பெருமை வாய்ந்தவர்களே!␢ உங்களுக்கு ஐயோ கேடு!⁾2 ⁽கல்னேக்குப் போய்ப் பாருங்கள்;␢ அங்கிருந்து சிறந்த நகரமாகிய␢ ஆமாத்துக்குப் போங்கள்;␢ பிறகு பெலிஸ்தியரின் நகரான␢ காத்துக்குச் செல்லுங்கள்;␢ அந்த அரசுகள்␢ உங்கள் அரசுகளை விடச்␢ சிறந்தவையோ?␢ உங்கள் நாடுகள்␢ அவர்களுடைய நாடுகளைவிடப்␢ பரப்பளவில் பெரியவையோ?⁾3 ⁽தீய நாளை␢ இன்னும் தள்ளிவைப்பதாக␢ நீங்கள் நினைக்கின்றீர்கள்;␢ ஆனால் வன்முறையின் ஆட்சியை␢ அருகில் கொண்டு வருகின்றீர்கள்.⁾4 ⁽தந்தத்தாலான கட்டிலில்␢ பஞ்சணைமீது சாய்ந்து கிடப்போருக்கும்␢ கிடையிலிருந்து வரும்␢ ஆட்டுக் குட்டிகளையும்␢ மந்தையிலிருந்து வரும்␢ கொழுத்த கன்றுகளையும்␢ உண்போருக்கும் ஐயோ கேடு!⁾5 ⁽அவர்கள் வீணையொலி எழுப்பி␢ அலறித் தீர்க்கின்றார்கள்,␢ தாவீதைப்போல␢ புதிய இசைக்கருவிகளைக்␢ கண்டுபிடிக்கின்றார்கள்.⁾6 ⁽கோப்பைகளில்␢ திராட்சை இரசம் குடிக்கின்றார்கள்;␢ உயர்ந்த நறுமண எண்ணெயைத்␢ தடவிக்கொள்கின்றார்கள்.⁾7 ⁽ஆகையால் அவர்கள்தான்␢ முதலில் நாடு கடத்தப்படுவார்கள்;␢ அவர்களது இன்பக் களிப்பும்␢ இல்லாதொழியும்.⁾8 ⁽தலைவராகிய ஆண்டவர்␢ தம்மீது ஆணையிட்டுக் கூறுகிறார்;␢ படைகளின் கடவுளாகிய ஆண்டவர்␢ இவ்வாறு சொல்கிறார்:␢ யாக்கோபின் செருக்கை␢ நான் வெறுக்கிறேன்;␢ அவனுடைய கோட்டைகளை␢ அருவருக்கிறேன்.␢ நகரையும் அதிலுள்ள யாவரையும்␢ நான் கைவிட்டு விடுவேன்.⁾⒫9 ஒரு வீட்டில் பத்துப்பேரே இருந்தாலும் அவர்களும் மாண்டு போவார்கள்.10 வீட்டிலிருந்து எலும்புகளை எடுத்துச் செல்ல மிகச் சிலரே தப்பிப் பிழைப்பார்கள்; ஒருவன், வீட்டில் மூலையிலிருக்கும் இன்னொருவனிடம், “உன்னுடன் வேறு யாரேனும் உளரோ?” என்று கேட்க, அவன், “இல்லை” என்று பதில் சொல்லி “பேசாதே, ஆண்டவரின் பெயரைச் சொல்லக் கூடாது” என்பான்.⒫11 ⁽ஆண்டவர்தாமே ஆணையிடுகின்றார்;␢ பெரிய மாளிகைகளைத்␢ தரைமட்டமாக்குவார்;␢ சிறிய வீடுகளைத்␢ தவிடுபொடியாக்குவார்.⁾12 ⁽பாறைகள்மேல் குதிரைகள் ஓடுமோ?␢ எருதுகளைக் கட்டிக்␢ கடலை உழுவதுண்டோ?␢ நீங்கள் நீதியை நஞ்சாக மாற்றினீர்கள்,␢ நேர்மையின் கனியை␢ எட்டிக்காயாய் ஆக்கினீர்கள்.⁾13 ⁽லோதபார் ஊரைப் பிடித்தது குறித்துப்␢ பூரிப்பு அடைகிறீர்கள்;␢ ‘நம் சொந்த வலிமையால்␢ கர்னாயிமைப் பிடித்து␢ நமதாக்கிக் கொள்ளவில்லையா?’ என்கிறீர்கள்.⁾14 ⁽‘இஸ்ரயேல் வீட்டாரே!␢ உங்களுக்கு எதிராக␢ வேற்றினம் ஒன்றைத் தூண்டிவிடுவேன்.␢ அவர்கள் ஆமாத்து வாயிலில் இருந்து␢ அராபா நீரோடை வரையில்␢ உங்களை ஒடுக்கித் துன்புறுத்துவார்கள்,’␢ என்கிறார் படைகளின் கடவுளாகிய␢ ஆண்டவர்.⁾Amos 6 ERV IRV TRV