Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ecclesiastes 6:7 in Tamil

Home Bible Ecclesiastes Ecclesiastes 6 Ecclesiastes 6:7

பிரசங்கி 6:7
மனுஷன் படும் பிரயாசமெல்லாம் அவன் வாய்க்காகத்தானே; அவன் மனதுக்கோ திருப்தியில்லை.

Tamil Indian Revised Version
மனிதனின் பிரயாசமெல்லாம் அவனுடைய வாய்க்காகத்தானே? அவனுடைய மனதுக்கோ திருப்தியில்லை.

Tamil Easy Reading Version
ஒருவன் மேலும் மேலும் வேலை செய்கிறான். ஏனென்றால், அவன் தனக்கு உணவு தேடிக்கொள்ளவே அவ்வாறு உழைக்கிறான். அதனால் அவன் திருப்தி அடைவதில்லை.

Thiru Viviliam
வயிற்றுக்காகவே ஒருவர் வேலை செய்கிறார்; ஆனால், அவருக்குப் போதுமான உணவு கிடைப்பதில்லை.

Ecclesiastes 6:6Ecclesiastes 6Ecclesiastes 6:8

King James Version (KJV)
All the labour of man is for his mouth, and yet the appetite is not filled.

American Standard Version (ASV)
All the labor of man is for his mouth, and yet the appetite is not filled.

Bible in Basic English (BBE)
All the work of man is for his mouth, and still he has a desire for food.

Darby English Bible (DBY)
All the labour of man is for his mouth, and yet the appetite is not filled.

World English Bible (WEB)
All the labor of man is for his mouth, and yet the appetite is not filled.

Young’s Literal Translation (YLT)
All the labour of man `is’ for his mouth, and yet the soul is not filled.

பிரசங்கி Ecclesiastes 6:7
மனுஷன் படும் பிரயாசமெல்லாம் அவன் வாய்க்காகத்தானே; அவன் மனதுக்கோ திருப்தியில்லை.
All the labour of man is for his mouth, and yet the appetite is not filled.

כָּלkālkahl
עֲמַ֥לʿămaluh-MAHL
הָאָדָ֖םhāʾādāmha-ah-DAHM
לְפִ֑יהוּlĕpîhûleh-FEE-hoo
וְגַםwĕgamveh-ɡAHM
הַנֶּ֖פֶשׁhannepešha-NEH-fesh
לֹ֥אlōʾloh
תִמָּלֵֽא׃timmālēʾtee-ma-LAY

Cross Reference

நீதிமொழிகள் 16:26
பிரயாசப்படுகிறவன் தனக்காகவே பிரயாசப்படுகிறான்; அவன் வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும்.

மத்தேயு 6:25
ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?

யோவான் 6:27
அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்.

1 தீமோத்தேயு 6:6
போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.

ஆதியாகமம் 3:17
பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.

பிரசங்கி 5:10
பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.

பிரசங்கி 6:3
ஒருவன் நூறு பிள்ளைகளைப் பெற்று, அநேகம் வருஷம் ஜீவித்து, தீர்க்காயுசை அடைந்திருந்தாலும், அவன் ஆத்துமா அந்தச் செல்வத்தால் திருப்தியடையாமலும், அவனுக்குப் பிரேதக்கல்லறை முதலாய் இல்லாமலும் போகுமானால், அவனைப்பார்க்கிலும் கருவழிந்த பிண்டம் வாசி என்கிறேன்.

லுூக்கா 12:19
பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.


Tags மனுஷன் படும் பிரயாசமெல்லாம் அவன் வாய்க்காகத்தானே அவன் மனதுக்கோ திருப்தியில்லை
Ecclesiastes 6:7 in Tamil Concordance Ecclesiastes 6:7 in Tamil Interlinear Ecclesiastes 6:7 in Tamil Image