1 தெசலோனிக்கேயர் 5:19
ஆவியை அவித்துப்போடாதிருங்கள்.
Tamil Indian Revised Version
ஆவியை அவித்துப்போடாமலிருங்கள்.
Tamil Easy Reading Version
பரிசுத்தாவியானவருக்கான வேலையை நிறுத்தாதீர்கள்.
Thiru Viviliam
தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம்.
King James Version (KJV)
Quench not the Spirit.
American Standard Version (ASV)
Quench not the Spirit;
Bible in Basic English (BBE)
Do not put out the light of the Spirit;
Darby English Bible (DBY)
quench not the Spirit;
World English Bible (WEB)
Don’t quench the Spirit.
Young’s Literal Translation (YLT)
The Spirit quench not;
1 தெசலோனிக்கேயர் 1 Thessalonians 5:19
ஆவியை அவித்துப்போடாதிருங்கள்.
Quench not the Spirit.
| τὸ | to | toh | |
| πνεῦμα | pneuma | PNAVE-ma | |
| μὴ | mē | may | |
| σβέννυτε | sbennyte | s-VANE-nyoo-tay |
Cross Reference
எபேசியர் 4:30
அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:51
வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்.
2 தீமோத்தேயு 1:6
இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கைளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்.
1 தீமோத்தேயு 4:14
மூப்பராகிய சங்கத்தார் உன்மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப்பற்றி அசதியாயிராதே.
ஏசாயா 63:10
அவர்களோ கலகம்பண்ணி, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்குச் சத்துருவாய் மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினார்.
சங்கீதம் 51:11
உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.
1 கொரிந்தியர் 14:30
அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால், முந்திப் பேசினவன் பேசாமலிருக்கக்கடவன்.
உன்னதப்பாட்டு 8:7
திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும்.
எபேசியர் 6:16
பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.
நெகேமியா 9:30
நீர் அநேக வருஷமாக அவர்கள்மேல் பொறுமையாயிருந்து, உம்முடைய ஆவியினால் பேசின உம்முடைய தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டாலும், அவர்கள் செவிகொடாதபடியினாலே, அவர்களை அந்நிய தேசஜனங்களின் கையில் ஒப்புக்கொடுத்தீர்.
1 சாமுவேல் 16:4
கர்த்தர் சொன்னபடியே சாமுவேல் செய்து, பெத்லெகேமுக்குப் போனான்; அப்பொழுது அவ்வூரின் மூப்பர் தத்தளிப்போடே அவனுக்கு எதிர்கொண்டுவந்து, நீர் வருகிறது சமாதானமா என்றார்கள்.
ஆதியாகமம் 6:3
அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சம்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.
Tags ஆவியை அவித்துப்போடாதிருங்கள்
1 Thessalonians 5:19 in Tamil Concordance 1 Thessalonians 5:19 in Tamil Interlinear 1 Thessalonians 5:19 in Tamil Image