சகரியா 13:9
அந்த மூன்றாம் பங்கை நான் அக்கினிக்குட்படப்பண்ணி, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன்; அவர்கள் என் நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்; நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பேன்; இது என்ஜனமென்று நான் சொல்லுவேன், கர்த்தர் என் தேவனென்று அவர்கள் சொல்லுவார்கள்.
Tamil Indian Revised Version
அந்த மூன்றாம் பங்கை நான் நெருப்புக்குட்படச்செய்து, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன்; அவர்கள் என் நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்; நான் அவர்களுடைய விண்ணப்பத்தைக் கேட்பேன்; இது என் மக்களென்று நான் சொல்லுவேன், கர்த்தர் என் தேவன் என்று அவர்கள் சொல்லுவார்கள்.
Tamil Easy Reading Version
பின்னர் நான் மீதியானவர்களைச் சோதிப்பேன். நான் அவர்களுக்கு அநேக துன்பங்களைக் கொடுப்பேன். அத்துன்பங்கள் வெள்ளியைச் சுத்தமான வெள்ளி என்று நிரூபிக்கும் நெருப்பைப் போன்றிருக்கும். ஒருவன் தங்கத்தைச் சோதிப்பது போல நான் அவர்களைச் சோதிப்பேன். பின்னர், அவர்கள் என்னை உதவிக்காக வேண்டுவார்கள். நான் அவர்களுக்குப் பதிலுரைப்பேன். நான், ‘நீங்கள் எனது ஜனங்கள்’ என்பேன். அவர்கள், ‘கர்த்தர் எங்கள் தேவன்’” என்பார்கள்.
Thiru Viviliam
“இந்த மூன்றில் ஒரு பங்கினரையும் வெள்ளியை நெருப்பில் இட்டுத் தூய்மைப்படுத்துவது போல் தூய்மைப்படுத்துவேன்; பொன்னைப் புடமிடுவதுபோல் புடமிடுவேன்; அவர்கள் என் பெயரை நினைந்து மன்றாடுவார்கள்; நானும் அவர்கள் மன்றாட்டிற்குச் செவி கொடுப்பேன்; ‛இவர்கள் என் மக்கள்’ என்பேன் நான், ‛ஆண்டவர் எங்கள் கடவுள்’ என்பார்கள் அவர்கள்.”
King James Version (KJV)
And I will bring the third part through the fire, and will refine them as silver is refined, and will try them as gold is tried: they shall call on my name, and I will hear them: I will say, It is my people: and they shall say, The LORD is my God.
American Standard Version (ASV)
And I will bring the third part into the fire, and will refine them as silver is refined, and will try them as gold is tried. They shall call on my name, and I will hear them: I will say, It is my people; and they shall say, Jehovah is my God.
Bible in Basic English (BBE)
And I will make the third part go through the fire, cleaning them as silver is made clean, and testing them as gold is tested: and they will make their prayer to me and I will give them an answer: I will say, It is my people; and they will say, The Lord is my God.
Darby English Bible (DBY)
And I will bring the third part into the fire, and will refine them as silver is refined, and will try them as gold is tried. They shall call on my name, and I will answer them: I will say, It is my people; and they shall say, Jehovah is my God.
World English Bible (WEB)
I will bring the third part into the fire, And will refine them as silver is refined, And will test them like gold is tested. They will call on my name, and I will hear them. I will say, ‘It is my people;’ And they will say, ‘Yahweh is my God.'”
Young’s Literal Translation (YLT)
And I have brought the third into fire, And refined them like a refining of silver, And have tried them like a trying of gold, It doth call in My name, and I answer it, I have said, `My people it `is’,’ And it saith, `Jehovah `is’ my God!’
சகரியா Zechariah 13:9
அந்த மூன்றாம் பங்கை நான் அக்கினிக்குட்படப்பண்ணி, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன்; அவர்கள் என் நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்; நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பேன்; இது என்ஜனமென்று நான் சொல்லுவேன், கர்த்தர் என் தேவனென்று அவர்கள் சொல்லுவார்கள்.
And I will bring the third part through the fire, and will refine them as silver is refined, and will try them as gold is tried: they shall call on my name, and I will hear them: I will say, It is my people: and they shall say, The LORD is my God.
| וְהֵבֵאתִ֤י | wĕhēbēʾtî | veh-hay-vay-TEE | |
| אֶת | ʾet | et | |
| הַשְּׁלִשִׁית֙ | haššĕlišît | ha-sheh-lee-SHEET | |
| בָּאֵ֔שׁ | bāʾēš | ba-AYSH | |
| וּצְרַפְתִּים֙ | ûṣĕraptîm | oo-tseh-rahf-TEEM | |
| כִּצְרֹ֣ף | kiṣrōp | keets-ROFE | |
| אֶת | ʾet | et | |
| הַכֶּ֔סֶף | hakkesep | ha-KEH-sef | |
| וּבְחַנְתִּ֖ים | ûbĕḥantîm | oo-veh-hahn-TEEM | |
| כִּבְחֹ֣ן | kibḥōn | keev-HONE | |
| אֶת | ʾet | et | |
| הַזָּהָ֑ב | hazzāhāb | ha-za-HAHV | |
| ה֣וּא׀ | hûʾ | hoo | |
| יִקְרָ֣א | yiqrāʾ | yeek-RA | |
| בִשְׁמִ֗י | bišmî | veesh-MEE | |
| וַֽאֲנִי֙ | waʾăniy | va-uh-NEE | |
| אֶעֱנֶ֣ה | ʾeʿĕne | eh-ay-NEH | |
| אֹת֔וֹ | ʾōtô | oh-TOH | |
| אָמַ֙רְתִּי֙ | ʾāmartiy | ah-MAHR-TEE | |
| עַמִּ֣י | ʿammî | ah-MEE | |
| ה֔וּא | hûʾ | hoo | |
| וְה֥וּא | wĕhûʾ | veh-HOO | |
| יֹאמַ֖ר | yōʾmar | yoh-MAHR | |
| יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA | |
| אֱלֹהָֽי׃ | ʾĕlōhāy | ay-loh-HAI |
Cross Reference
ஏசாயா 48:10
இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்.
சங்கீதம் 50:15
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
1 பேதுரு 1:6
இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள்.
எரேமியா 29:11
நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.
மல்கியா 3:2
ஆனாலும் அவர் வரும் நாளை சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார்.
சகரியா 10:6
நான் யூதா வம்சத்தாரைப் பலப்பபடுத்தி யோசேப்பு வம்சத்தாரை இரட்சித்து, அவர்களைத் திரும்ப நிலைக்கப்பண்ணுவேன்; நான் அவர்களுக்கு இரங்கினேன்; அவர்கள் என்னால் ஒருக்காலும் தள்ளிவிடப்படாதவர்களைப்போல் இருப்பார்கள்; நான் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர், நான் அவர்களுக்குச் செவிகொடுப்பேன்.
ஏசாயா 65:23
அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை, அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை; அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.
சங்கீதம் 34:15
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.
உபாகமம் 26:17
கர்த்தர் எனக்கு தேவனாயிருப்பாரென்றும், நான் அவர் வழிகளில் நடந்து, அவர் கட்டளைகளையும் அவர் கற்பனைகளையும் அவர் நியாயங்களையும் கைக்கொண்டு, அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவேன் என்றும் நீ இன்று அவருக்கு வாக்குக்கொடுத்தாய்.
சங்கீதம் 66:10
தேவனே, எங்களைச் சோதித்தீர்; வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர்.
எரேமியா 30:22
நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்.
1 பேதுரு 4:12
பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்,
ரோமர் 10:12
யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்.
1 கொரிந்தியர் 3:11
போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.
எபிரெயர் 8:10
அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.
யாக்கோபு 1:12
சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.
வெளிப்படுத்தின விசேஷம் 21:3
மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.
வெளிப்படுத்தின விசேஷம் 21:7
ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.
மத்தேயு 22:29
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:21
அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்.
சங்கீதம் 144:15
இவ்விதமான சீரைப்பெற்றஜனம் பாக்கியமுள்ளது; கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது.
ஓசியா 2:21
அக்காலத்தில் நான் மறுமொழிகொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் ஜனங்களுக்கு மறுமொழிகொடுப்பேன், அவைகள் பூமிக்கு மறுமொழி கொடுக்கும்.
எரேமியா 31:33
அந்நாட்களுக்குப் பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 58:9
அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும் விரல் நீட்டுதலையும் நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி,
ஏசாயா 43:2
நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.
சங்கீதம் 91:15
அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.
யோபு 23:10
ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.
லேவியராகமம் 26:44
அவர்கள் தங்கள் சத்துருக்களின் தேசத்திலிருந்தாலும், நான் அவர்களை நிர்மூலமாக்கத்தக்கதாகவும், நான் அவர்களோடே பண்ணின என் உடன்படிக்கையை அபத்தமாக்கத்தக்கதாகவும், நான் அவர்களைக் கைவிடவும் வெறுக்கவுமாட்டேன்; நான் அவர்கள் தேவனாகிய கர்த்தர்.
எசேக்கியேல் 11:20
அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்.
நீதிமொழிகள் 17:3
வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர்.
யோவேல் 2:32
அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; கர்த்தர் சொன்னபடி, சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும் மீதியாயிருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும்.
சகரியா 8:8
அவர்களை அழைத்துக்கொண்டுவருவேன்; அவர்கள் எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான ஜனமாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
சகரியா 12:10
நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.
எரேமியா 32:38
அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்.
எசேக்கியேல் 36:28
உங்கள் பிதாக்களுக்கு நான் கொடுத்த தேசத்திலே நீங்கள் குடியிருப்பீர்கள்; நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருந்து,
எசேக்கியேல் 37:27
என் வாசஸ்தலம் அவர்களிடத்தில் இருக்கும், நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.
லேவியராகமம் 26:12
நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்.
ஏசாயா 44:1
இப்போதும், என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலே, கேள்.
Tags அந்த மூன்றாம் பங்கை நான் அக்கினிக்குட்படப்பண்ணி வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன் அவர்கள் என் நாமத்தைத் தொழுதுகொள்வார்கள் நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பேன் இது என்ஜனமென்று நான் சொல்லுவேன் கர்த்தர் என் தேவனென்று அவர்கள் சொல்லுவார்கள்
Zechariah 13:9 in Tamil Concordance Zechariah 13:9 in Tamil Interlinear Zechariah 13:9 in Tamil Image