Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 36:35 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 36 Ezekiel 36:35

எசேக்கியேல் 36:35
பாழாய்க்கிடந்த இத்தேசம், ஏதேன் தோட்டத்தைப்போலாயிற்றென்றும், அவாந்தரமும் பாழும் நிர்மூலமுமாயிருந்த பட்டணங்கள் அரணிப்பானவைகளும் குடியேற்றப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றும் சொல்லுவார்கள்.

Tamil Indian Revised Version
பாழாய்க்கிடந்த இந்த தேசம், ஏதேன் தோட்டத்தைப்போலானது என்றும், பாலைவனமும் பாழும் அழிக்கப்பட்டும் இருந்த பட்டணங்கள் பாதுகாப்பானவைகளும் குடியேற்றப்பட்டவைகளுமாக இருக்கிறது என்றும் சொல்லுவார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் சொல்வார்கள், ‘முன்பு இந்நிலம் பாழாகக் கிடந்தது, ஆனால் இப்பொழுது ஏதேன் தோட்டம் போல் ஆகியிருக்கிறது. நகரங்கள் அழிக்கப்பட்டிருந்தன. அவை பாழாகி வெறுமையாயிற்று. ஆனால் இப்பொழுது அவை பாதுகாக்கப்பட்டன. அவற்றில் ஜனங்கள் வாழ்கின்றனர்.’”

Thiru Viviliam
அப்போது மக்கள், “பாழாய்க் கிடந்த இந்த நிலம் ஏதேன் தோட்டம்போல் ஆகிவிட்டது. இடிந்து பாழாகிய அழிவிடங்களாய்க் கிடந்த நகர்கள் அரண்சூழ்ந்து குடியேற்ற நகர்களாகிவிட்டனவே!” என்பர்.

Ezekiel 36:34Ezekiel 36Ezekiel 36:36

King James Version (KJV)
And they shall say, This land that was desolate is become like the garden of Eden; and the waste and desolate and ruined cities are become fenced, and are inhabited.

American Standard Version (ASV)
And they shall say, This land that was desolate is become like the garden of Eden; and the waste and desolate and ruined cities are fortified and inhabited.

Bible in Basic English (BBE)
And they will say, This land which was waste has become like the garden of Eden; and the towns which were unpeopled and wasted and pulled down are walled and peopled.

Darby English Bible (DBY)
And they shall say, This land that was desolate is become like the garden of Eden; and the waste and desolate and ruined cities [are] fortified [and] inhabited.

World English Bible (WEB)
They shall say, This land that was desolate is become like the garden of Eden; and the waste and desolate and ruined cities are fortified and inhabited.

Young’s Literal Translation (YLT)
And they have said: This land, that was desolated, Hath been as the garden of Eden, And the cities — the wasted, And the desolated, and the broken down, Fenced places have remained.

எசேக்கியேல் Ezekiel 36:35
பாழாய்க்கிடந்த இத்தேசம், ஏதேன் தோட்டத்தைப்போலாயிற்றென்றும், அவாந்தரமும் பாழும் நிர்மூலமுமாயிருந்த பட்டணங்கள் அரணிப்பானவைகளும் குடியேற்றப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றும் சொல்லுவார்கள்.
And they shall say, This land that was desolate is become like the garden of Eden; and the waste and desolate and ruined cities are become fenced, and are inhabited.

וְאָמְר֗וּwĕʾomrûveh-ome-ROO
הָאָ֤רֶץhāʾāreṣha-AH-rets
הַלֵּ֙זוּ֙hallēzûha-LAY-ZOO
הַנְּשַׁמָּ֔הhannĕšammâha-neh-sha-MA
הָיְתָ֖הhāytâhai-TA
כְּגַןkĕgankeh-ɡAHN
עֵ֑דֶןʿēdenA-den
וְהֶעָרִ֧יםwĕheʿārîmveh-heh-ah-REEM
הֶחֳרֵב֛וֹתheḥŏrēbôtheh-hoh-ray-VOTE
וְהַֽנְשַׁמּ֥וֹתwĕhanšammôtveh-hahn-SHA-mote
וְהַנֶּהֱרָס֖וֹתwĕhannehĕrāsôtveh-ha-neh-hay-ra-SOTE
בְּצוּר֥וֹתbĕṣûrôtbeh-tsoo-ROTE
יָשָֽׁבוּ׃yāšābûya-sha-VOO

Cross Reference

ஏசாயா 51:3
கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல்செய்வார்; அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச் செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப்போலவும், அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும்.

யோவேல் 2:3
அவைகளுக்கு முன்னாக அக்கினி பட்சிக்கும், அவைகளுக்குப் பின்னாக ஜுவாலை எரிக்கும்; அவைகளுக்கு முன்னாக தேசம் ஏதேன் தோட்டத்தைப்போலவும், அவைகளுக்குப் பின்னாகப் பாழான வனாந்தரத்தைப்போலவும் இருக்கும்; அவைகளுக்கு ஒன்றும் தப்பிப்போவதில்லை.

ஆதியாகமம் 2:8
தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.

ஆதியாகமம் 13:10
அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து; யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக் கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போம் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது.

சங்கீதம் 58:11
அப்பொழுது, மெய்யாய் நீதிமானுக்குப் பலன் உண்டென்றும், மெய்யாய் பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனுஷன் சொல்லுவான்.

சங்கீதம் 64:9
எல்லா மனுஷரும் பயந்து, தேவனுடைய செயலை அறிவித்து, அவர் கிரியையை உணர்ந்துகொள்வார்கள்.

சங்கீதம் 126:2
அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்த சத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.

எரேமியா 33:9
நான் அவர்களுக்குச் செய்யும் நன்மையையெல்லாம் கேட்கப்போகிற பூமியின் எல்லா ஜாதிகளுக்கு முன்பாக அது எனக்கு மகிழ்ச்சியுள்ள கீர்த்தியாயும் புகழ்ச்சியாயும் மகிமையாயும் இருக்கும்; நான் அவர்களுக்கு அருளிச்செய்யும் எல்லா நன்மையினிமித்தமும், எல்லாச்சமாதானத்தினிமித்தமும் இவர்கள் பயந்து நடுங்குவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

எசேக்கியேல் 37:13
என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படப்பண்ணும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.


Tags பாழாய்க்கிடந்த இத்தேசம் ஏதேன் தோட்டத்தைப்போலாயிற்றென்றும் அவாந்தரமும் பாழும் நிர்மூலமுமாயிருந்த பட்டணங்கள் அரணிப்பானவைகளும் குடியேற்றப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றும் சொல்லுவார்கள்
Ezekiel 36:35 in Tamil Concordance Ezekiel 36:35 in Tamil Interlinear Ezekiel 36:35 in Tamil Image