எரேமியா 10:19
ஐயோ! நான் நொறுக்கப்பட்டேன்; என் காயம் கொடிதாயிருக்கிறது; ஆனாலும் இது நான் சகிக்கவேண்டிய என் நோய் என்று நான் சொல்லுவேன்.
Tamil Indian Revised Version
ஐயோ! நான் நொறுக்கப்பட்டேன்; என் காயம் பெரிதாயிருக்கிறது; ஆனாலும் இது நான் சகிக்கவேண்டிய என் நோய் என்று நான் சொல்லுவேன்.
Tamil Easy Reading Version
ஓ! நான் (எரேமியா) மோசமாகக் காயப்பட்டேன், நான் புண்பட்டேன், என்னால் குணமாக முடியவில்லை எனக்குள் நான் இவ்வாறு சொல்லிக்கொண்டேன். “இதுதான் என்னுடைய நோய். இதன் மூலம் நான் துன்பப்படவேண்டும்.”
Thiru Viviliam
⁽ஐயோ நான் நொறுங்குண்டேன்;␢ என் காயம் கொடியது;␢ நானோ “உண்மையில் இது ஒரு நோய்;␢ நான் இதைத் தாங்கியே␢ ஆக வேண்டும்” என்று␢ எண்ணிக்கொண்டேன்.⁾
King James Version (KJV)
Woe is me for my hurt! my wound is grievous; but I said, Truly this is a grief, and I must bear it.
American Standard Version (ASV)
Woe is me because of my hurt! my wound is grievous: but I said, Truly this is `my’ grief, and I must bear it.
Bible in Basic English (BBE)
Sorrow is mine for I am wounded! my wound may not be made well; and I said, Cruel is my disease, I may not be free from it.
Darby English Bible (DBY)
Woe is me, for my wound! My stroke is hard to heal, and I had said, Yea, this is [my] grief, and I will bear it.
World English Bible (WEB)
Woe is me because of my hurt! my wound is grievous: but I said, Truly this is [my] grief, and I must bear it.
Young’s Literal Translation (YLT)
Wo to me for my breaking, Grievious hath been my smiting, And I said, Only, this `is’ my sickness, and I bear it.
எரேமியா Jeremiah 10:19
ஐயோ! நான் நொறுக்கப்பட்டேன்; என் காயம் கொடிதாயிருக்கிறது; ஆனாலும் இது நான் சகிக்கவேண்டிய என் நோய் என்று நான் சொல்லுவேன்.
Woe is me for my hurt! my wound is grievous; but I said, Truly this is a grief, and I must bear it.
| א֥וֹי | ʾôy | oy | |
| לִי֙ | liy | lee | |
| עַל | ʿal | al | |
| שִׁבְרִ֔י | šibrî | sheev-REE | |
| נַחְלָ֖ה | naḥlâ | nahk-LA | |
| מַכָּתִ֑י | makkātî | ma-ka-TEE | |
| וַאֲנִ֣י | waʾănî | va-uh-NEE | |
| אָמַ֔רְתִּי | ʾāmartî | ah-MAHR-tee | |
| אַ֛ךְ | ʾak | ak | |
| זֶ֥ה | ze | zeh | |
| חֳלִ֖י | ḥŏlî | hoh-LEE | |
| וְאֶשָּׂאֶֽנּוּ׃ | wĕʾeśśāʾennû | veh-eh-sa-EH-noo |
Cross Reference
மீகா 7:9
நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; அவர் எனக்காக வழக்காடி என் நியாயத்தை விசாரிக்குமட்டும் அவருடைய கோபத்தைச் சுமப்பேன்; அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டுவருவார், அவருடைய நீதியைப் பார்ப்பேன்.
புலம்பல் 3:39
உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? அவன் தன் பாவத்துக்கு; வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?
எரேமியா 14:17
என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் ஜனமென்கிற குமாரத்தியாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் கொடிய காயத்தினாலும் சேதப்பட்டிருக்கிறாள்.
எரேமியா 4:31
கர்ப்பவேதனைப்படுகிறவளின் சத்தமாகவும், முதல்விசை பிள்ளை பெறுகிறவளின் வியாகுலமாகவும், சீயோன் குமாரத்தியின் சத்தத்தைக் கேட்கிறேன்; அவள் பெருமூச்சுவிட்டு, தன் கைகளை விரித்து: ஐயோ! கொலைபாதகர்களாலே என் ஆத்துமா சோர்ந்துபோகிறதே என்கிறாள்.
சங்கீதம் 39:9
நீரே இதைச் செய்தீர் என்று நான் வாயைத் திறவாமல் மவுனமாயிருந்தேன்.
புலம்பல் 3:48
என் ஜனமாகிய குமாரத்தி அடைந்த கேட்டினிமித்தம் என் கண்களிலிருந்து நீர்க்கால்கள் பாய்கிறது.
புலம்பல் 3:18
என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று என்றேன்.
புலம்பல் 2:11
என் ஜனமாகிய குமாரத்தியின் நொறுங்குதலினிமித்தம் கண்ணீர் சொரிகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது; என் குடல்கள் கொதிக்கிறது; என் ஈரல் இளகித் தரையிலே வடிகிறது; குழந்தைகளும் பாலகரும் நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக்கிடக்கிறார்கள்.
புலம்பல் 1:12
வழியில் நடந்துபோகிற சகல ஜனங்களே, இதைக்குறித்து உங்களுக்குக் கவையில்லையா? கர்த்தர் தமது உக்கிரமான கோபமூண்ட நாளிலே என்னைச் சஞ்சலப்படுத்தினதினால் எனக்கு உண்டான என் துக்கத்துக்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள்.
புலம்பல் 1:2
இராக்காலத்திலே அழுதுகொண்டிருக்கிறாள், அவளுடைய கண்ணீர் அவள் கன்னங்களில் வடிகிறது; அவளுடைய நேசர் எல்லாருக்குள்ளும் அவளைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை; அவளுடைய சிநேகிதர் எல்லாரும் அவளுக்குத் துரோகிகளும் சத்துருக்களுமானார்கள்.
எரேமியா 17:13
இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தாவே, உம்மைவிட்டு விலகுகிற யாவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தரை விட்டு விலகிப்போனபடியால், உம்மைவிட்டு அகன்றுபோகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்.
எரேமியா 9:1
ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன்.
எரேமியா 8:21
என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களினால் நானும் காயப்பட்டேன்; கரிகறுத்திருக்கிறேன்; திகைப்பு என்னைப் பிடித்தது.
எரேமியா 4:19
என் குடல்கள், என் குடல்களே நோகிறது; என் உள்ளம் வேதனைப்படுகிறது, என் இருதயம் என்னில் கதறுகிறது; நான் பேசாமல் அமர்ந்திருக்கக் கூடாது; என் ஆத்துமாவே, எக்காளத்தின் சத்தத்தையும், யுத்தத்தின் ஆர்ப்பரிப்பையும் கேட்டாயே.
ஏசாயா 8:17
நானோ யாக்கோபின் குடும்பத்துக்குத் தமது முகத்தை மறைக்கிற கர்த்தருக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்.
சங்கீதம் 77:10
அப்பொழுது நான்: இது என் பலவீனம்; ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன்.
Tags ஐயோ நான் நொறுக்கப்பட்டேன் என் காயம் கொடிதாயிருக்கிறது ஆனாலும் இது நான் சகிக்கவேண்டிய என் நோய் என்று நான் சொல்லுவேன்
Jeremiah 10:19 in Tamil Concordance Jeremiah 10:19 in Tamil Interlinear Jeremiah 10:19 in Tamil Image