எரேமியா 10:7
ஜாதிகளின் ராஜாவே, உமக்குப் பயப்படாதிருப்பவன் யார்? தேவரீருக்கே பயப்படவேண்டிது; ஜாதிகளுடைய எல்லா ஞானிகளிலும், அவர்களுடைய எல்லா ராஜ்யத்திலும் உமக்கு ஒப்பானவன் இல்லை.
Tamil Indian Revised Version
தேசங்களின் ராஜாவே, உமக்குப் பயப்படாதிருப்பவன் யார்? தேவரீர் ஒருவருக்கே பயப்படவேண்டியது; மக்களுடைய எல்லா ஞானிகளிலும், அவர்களுடைய எல்லா தேசத்திலும் உமக்கு ஒப்பானவன் இல்லை.
Tamil Easy Reading Version
தேவனே! எல்லோரும் உமக்கு மரியாதைச் செலுத்தவேண்டும். அனைத்து தேசத்தாருக்கும் நீரே அரசன். அவர்களின் மரியாதைக்கு நீர் பாத்திரர். அந்த நாடுகளுக்கிடையில் பல ஞானமுள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எவரும் உம்மைப் போன்று ஞானமுள்ளவர்கள் இல்லை.
Thiru Viviliam
⁽மக்களினங்களின் மன்னரே!␢ உமக்கு அஞ்சாதவர் யார்?␢ அரசுரிமை உமதே;␢ வேற்றினத்தாரின் ஞானிகள்␢ அனைவரிலும்␢ அவர்களின் அரசுகள் அனைத்திலும்␢ உமக்கு நிகர் யாருமிலர்.⁾
King James Version (KJV)
Who would not fear thee, O King of nations? for to thee doth it appertain: forasmuch as among all the wise men of the nations, and in all their kingdoms, there is none like unto thee.
American Standard Version (ASV)
Who should not fear thee, O King of the nations? for to thee doth it appertain; forasmuch as among all the wise men of the nations, and in all their royal estate, there is none like unto thee.
Bible in Basic English (BBE)
Who would not have fear of you, O King of the nations? for it is your right: for among all the wise men of the nations, and in all their kingdoms, there is no one like you.
Darby English Bible (DBY)
Who would not fear thee, O King of nations? For to thee doth it appertain; for among all the wise men of the nations, and in all their kingdoms, there is none like unto thee.
World English Bible (WEB)
Who should not fear you, King of the nations? for to you does it appertain; because among all the wise men of the nations, and in all their royal estate, there is none like you.
Young’s Literal Translation (YLT)
Who doth not fear Thee, king of the nations? For to Thee it is becoming, For among all the wise of the nations, And in all their kingdom there is none like Thee.
எரேமியா Jeremiah 10:7
ஜாதிகளின் ராஜாவே, உமக்குப் பயப்படாதிருப்பவன் யார்? தேவரீருக்கே பயப்படவேண்டிது; ஜாதிகளுடைய எல்லா ஞானிகளிலும், அவர்களுடைய எல்லா ராஜ்யத்திலும் உமக்கு ஒப்பானவன் இல்லை.
Who would not fear thee, O King of nations? for to thee doth it appertain: forasmuch as among all the wise men of the nations, and in all their kingdoms, there is none like unto thee.
| מִ֣י | mî | mee | |
| לֹ֤א | lōʾ | loh | |
| יִֽרָאֲךָ֙ | yirāʾăkā | yee-ra-uh-HA | |
| מֶ֣לֶךְ | melek | MEH-lek | |
| הַגּוֹיִ֔ם | haggôyim | ha-ɡoh-YEEM | |
| כִּ֥י | kî | kee | |
| לְךָ֖ | lĕkā | leh-HA | |
| יָאָ֑תָה | yāʾātâ | ya-AH-ta | |
| כִּ֣י | kî | kee | |
| בְכָל | bĕkāl | veh-HAHL | |
| חַכְמֵ֧י | ḥakmê | hahk-MAY | |
| הַגּוֹיִ֛ם | haggôyim | ha-ɡoh-YEEM | |
| וּבְכָל | ûbĕkāl | oo-veh-HAHL | |
| מַלְכוּתָ֖ם | malkûtām | mahl-hoo-TAHM | |
| מֵאֵ֥ין | mēʾên | may-ANE | |
| כָּמֽוֹךָ׃ | kāmôkā | ka-MOH-ha |
Cross Reference
வெளிப்படுத்தின விசேஷம் 15:4
கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்.
சங்கீதம் 22:28
ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர்.
1 கொரிந்தியர் 1:19
அந்தப்படி: ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேனென்று எழுதியிருக்கிறது.
எரேமியா 5:22
எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக் கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மணலை எல்லையாய் வைத்திருக்கிறவராகிய எனக்குமுன்பாக அதிராதிருப்பீர்களோ?
வெளிப்படுத்தின விசேஷம் 11:15
ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.
லுூக்கா 12:5
நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
சகரியா 2:11
அந்நாளிலே அநேகம் ஜாதிகள் கர்த்தரைச் சேர்ந்து என் ஜனமாவார்கள்; நான் உன் நடுவில் வாசமாயிருப்பேன்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை உன்னிடத்தில் அனுப்பினாரென்று அறிவாய்.
எரேமியா 10:6
கர்த்தாவே உமக்கு ஒப்பானவனில்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது.
ஏசாயா 2:4
அவர் ஜாதிகளுக்குள் நியாயம் தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்துகொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்குவிரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.
சங்கீதம் 89:6
ஆகாயமண்டலத்தில் கர்த்தருக்கு நிகரானவர் யார்? பலவான்களின் புத்திரரில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்?
சங்கீதம் 86:9
ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா ஜாதிகளும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள்.
சங்கீதம் 76:7
நீர், நீரே, பயங்கரமானவர்; உமது கோபம் மூளும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?
சங்கீதம் 72:11
சகல ராஜாக்களும் அவரைப்பணிந்து கொள்வார்கள்; சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள்.
யோபு 37:23
சர்வவல்லவரை நாம் கண்டுபிடிக்கக் கூடாது; அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகாநீதிபரர்; அவர் ஒடுக்கமாட்டார்.
Tags ஜாதிகளின் ராஜாவே உமக்குப் பயப்படாதிருப்பவன் யார் தேவரீருக்கே பயப்படவேண்டிது ஜாதிகளுடைய எல்லா ஞானிகளிலும் அவர்களுடைய எல்லா ராஜ்யத்திலும் உமக்கு ஒப்பானவன் இல்லை
Jeremiah 10:7 in Tamil Concordance Jeremiah 10:7 in Tamil Interlinear Jeremiah 10:7 in Tamil Image