Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 7:1 in Tamil

Home Bible Proverbs Proverbs 7 Proverbs 7:1

நீதிமொழிகள் 7:1
என் மகனே, நீ என் வார்த்தைகளைக் காத்து, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து.

Tamil Indian Revised Version
என் மகனே, நீ என்னுடைய வார்த்தைகளைக்காத்து, என்னுடைய கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து.

Tamil Easy Reading Version
என் மகனே! எனது வார்த்தைகளை நினைவுப்படுத்திக்கொள். நான் உனக்குத் தந்த கட்டளைகளை மறக்காதே.

Thiru Viviliam
என் பிள்ளையே, என் வார்த்தைகளை மனத்தில் இருத்து; என் கட்டளைகளைச் செல்வமெனப் போற்று.

Title
ஞானம் உன்னை விபச்சாரத்திலிருந்து காக்கும்

Proverbs 7Proverbs 7:2

King James Version (KJV)
My son, keep my words, and lay up my commandments with thee.

American Standard Version (ASV)
My son, keep my words, And lay up my commandments with thee.

Bible in Basic English (BBE)
My son, keep my sayings, and let my rules be stored up with you.

Darby English Bible (DBY)
My son, keep my words, and lay up my commandments with thee.

World English Bible (WEB)
My son, keep my words. Lay up my commandments within you.

Young’s Literal Translation (YLT)
My son! keep my sayings, And my commands lay up with thee.

நீதிமொழிகள் Proverbs 7:1
என் மகனே, நீ என் வார்த்தைகளைக் காத்து, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து.
My son, keep my words, and lay up my commandments with thee.

בְּ֭נִיbĕnîBEH-nee
שְׁמֹ֣רšĕmōrsheh-MORE
אֲמָרָ֑יʾămārāyuh-ma-RAI
וּ֝מִצְוֹתַ֗יûmiṣwōtayOO-mee-ts-oh-TAI
תִּצְפֹּ֥ןtiṣpōnteets-PONE
אִתָּֽךְ׃ʾittākee-TAHK

Cross Reference

நீதிமொழிகள் 1:8
என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.

வெளிப்படுத்தின விசேஷம் 22:9
அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான்.

வெளிப்படுத்தின விசேஷம் 1:3
இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.

யோவான் 15:20
ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள்.

யோவான் 14:23
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.

லுூக்கா 11:28
அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.

லுூக்கா 8:15
நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.

நீதிமொழிகள் 10:14
ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்; மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது.

நீதிமொழிகள் 3:1
என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.

நீதிமொழிகள் 2:1
என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு,

யோபு 22:22
அவர் வாயினின்று பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ளவேண்டுகிறேன்.

உபாகமம் 11:28
எங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமல், இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வழியைவிட்டு விலகி, நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றுவீர்களானால் சாபமும் வரும்.


Tags என் மகனே நீ என் வார்த்தைகளைக் காத்து என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து
Proverbs 7:1 in Tamil Concordance Proverbs 7:1 in Tamil Interlinear Proverbs 7:1 in Tamil Image