Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Kings 11:17 in Tamil

Home Bible 2 Kings 2 Kings 11 2 Kings 11:17

2 இராஜாக்கள் 11:17
அப்பொழுது யோய்தா, அவர்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு, ராஜாவும் ஜனங்களும் கர்த்தரோடே உடன்படிக்கைபண்ணவும், ராஜாவும் ஜனங்களும் ஒருவரோடொருவர் உடன்படிக்கைபண்ணவும் செய்து,

Tamil Indian Revised Version
அப்பொழுது யோய்தா, அவர்கள் கர்த்தருடைய மக்களாயிருக்கும்படிக்கு, ராஜாவும் மக்களும் கர்த்தரோடே உடன்படிக்கைசெய்யவும், ராஜாவும் மக்களும் ஒருவரோடொருவர் உடன்படிக்கைசெய்யவும் செய்து,

Tamil Easy Reading Version
பிறகு கர்த்தருக்கும் அரசனுக்கும் ஜனங்களுக்கும் இடையில் யோய்தா ஒரு ஒப்பந்தம் செய்தான். இதன்படி அரசனும் ஜனங்களும் கர்த்தருக்கு உரியவர்கள். பின் யோய்தா அரசனுக்கும் ஜனங்களுக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் செய்தான். அதன்படி அரசன் ஜனங்களுக்கு நன்மை செய்ய வேண்டும், ஜனங்களும் அரசனுக்குக் கீழ்ப்படிந்து வாழவேண்டும்.

Thiru Viviliam
பின்பு யோயாதா, ஆண்டவர் ஒரு பக்கமும், அரசன், மக்கள் மறுபக்கமுமாக அவர்களிடையே உடன்படிக்கை செய்து வைத்தார். இதன் மூலம் அரசனும் மக்களும் ஆண்டவரின் மக்களாய் இருப்பதாக ஏற்றுக்கொண்டனர். அவ்வாறே, அவர் அரசனுக்கும் மக்களுக்குமிடையே உடன்படிக்கை செய்து வைத்தார்.

Other Title
யோயாதாவின் சீர்திருத்தங்கள்§(2 குறி 23:16-21)

2 Kings 11:162 Kings 112 Kings 11:18

King James Version (KJV)
And Jehoiada made a covenant between the LORD and the king and the people, that they should be the LORD’s people; between the king also and the people.

American Standard Version (ASV)
And Jehoiada made a covenant between Jehovah and the king and the people, that they should be Jehovah’s people; between the king also and the people.

Bible in Basic English (BBE)
And Jehoiada made an agreement between the Lord and the king and the people, that they would be the Lord’s people; and in the same way between the king and the people.

Darby English Bible (DBY)
And Jehoiada made a covenant between Jehovah and the king and the people, that they should be the people of Jehovah; and between the king and the people.

Webster’s Bible (WBT)
And Jehoiada made a covenant between the LORD and the king and the people, that they should be the LORD’S people; between the king also and the people.

World English Bible (WEB)
Jehoiada made a covenant between Yahweh and the king and the people, that they should be Yahweh’s people; between the king also and the people.

Young’s Literal Translation (YLT)
And Jehoiada maketh the covenant between Jehovah and the king and the people, to be for a people to Jehovah, and between the king and the people.

2 இராஜாக்கள் 2 Kings 11:17
அப்பொழுது யோய்தா, அவர்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு, ராஜாவும் ஜனங்களும் கர்த்தரோடே உடன்படிக்கைபண்ணவும், ராஜாவும் ஜனங்களும் ஒருவரோடொருவர் உடன்படிக்கைபண்ணவும் செய்து,
And Jehoiada made a covenant between the LORD and the king and the people, that they should be the LORD's people; between the king also and the people.

וַיִּכְרֹ֨תwayyikrōtva-yeek-ROTE
יְהֽוֹיָדָ֜עyĕhôyādāʿyeh-hoh-ya-DA
אֶֽתʾetet
הַבְּרִ֗יתhabbĕrîtha-beh-REET
בֵּ֤יןbênbane
יְהוָה֙yĕhwāhyeh-VA
וּבֵ֤יןûbênoo-VANE
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
וּבֵ֣יןûbênoo-VANE
הָעָ֔םhāʿāmha-AM
לִֽהְי֥וֹתlihĕyôtlee-heh-YOTE
לְעָ֖םlĕʿāmleh-AM
לַֽיהוָ֑הlayhwâlai-VA
וּבֵ֥יןûbênoo-VANE
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
וּבֵ֥יןûbênoo-VANE
הָעָֽם׃hāʿāmha-AM

Cross Reference

2 சாமுவேல் 5:3
இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் எப்ரோனில் ராஜாவினிடத்தில் வந்தார்கள்; தாவீதுராஜா எப்ரோனிலே கர்த்தருக்குமுன்பாக அவர்களோடே உடன்படிக்கைபண்ணினபின்பு, அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள்.

2 நாளாகமம் 34:31
ராஜா தன் ஸ்தானத்திலே நின்று, அந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற உடன்படிக்கையின் வார்த்தைகளின்படியே தான் செய்வதினாலே, கர்த்தரைப் பின்பற்றி நடப்பேன் என்றும், தன் முழுஇருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளுவேன் என்றும் கர்த்தருடைய சந்நிதியில் உடன்படிக்கைபண்ணி,

யோசுவா 24:25
அந்தப்படி யோசுவா அந்நாளில் சீகேமிலே ஜனங்களோடே உடன்படிக்கைபண்ணி, அவர்களுக்கு அதைப் பிரமாணமும் நியாயமுமாக ஏற்படுத்தினான்.

எஸ்றா 10:3
இப்பொழுதும் அந்த ஸ்திரீகளெல்லாரையும், அவர்களிடத்தில் பிறந்தவர்களையும், என் ஆண்டவனுடைய ஆலோசனைக்கும், நமது தேவனுடைய கற்பனைக்கு நடுங்குகிறவர்களின் ஆலோசனைக்கும் ஏற்றபிரகாரம் அகற்றிப்போடுவோம் என்று நம்முடைய தேவனோடே உடன்படிக்கைப் பண்ணக்கடவோம்; நியாயப்பிரமாணத்தின்படியே செய்யப்படுவதாக,

2 நாளாகமம் 29:10
இப்போதும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய உக்கிரகோபம் நம்மைவிட்டுத் திரும்பும்படிக்கு, அவரோடே உடன்படிக்கைபண்ண மனதிலே நிர்ணயித்துக்கொண்டேன்.

2 நாளாகமம் 15:12
தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் தேடுவோம் என்றும்;

1 சாமுவேல் 10:25
சாமுவேல் ராஜாங்கத்தின் முறையை ஜனங்களுக்குத் தெரிவித்து, அதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, கர்த்தருடைய சந்நிதியில் வைத்து, ஜனங்களையெல்லாம் அவரவர் வீட்டுக்கு அனுப்பிவிட்டான்.

2 கொரிந்தியர் 8:5
மேலும் நாங்கள் நினைத்தபடிமாத்திரம் கொடாமல், தேவனுடைய சித்தத்தினாலே முன்பு தங்களைத்தாமே கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள்.

ரோமர் 13:1
எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.

நெகேமியா 10:28
ஜனங்களில் மற்றவர்களாகிய ஆசாரியரும், லேவியரும் வாசல் காவலாளரும், பாடகரும், நிதனீமியரும், தேசங்களின் ஜனங்களைவிட்டுப் பிரிந்து விலகி தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குத் திரும்பின அனைவரும் அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும் அவர்கள் குமாரத்திகளுΠξகிய அறிவும் Ϊுத்தியும் உள͠γவர்களெல்லாரும்,

நெகேமியா 9:38
இவையெல்லாம் இப்படி இருக்கிறபடியால் நாங்கள் உறுதியான உடன்படிக்கைபண்ணி அதை எழுதிவைக்கிறோம்; எங்கள் பிரபுக்களும் எங்கள் லேவியரும், எங்கள் ஆசாரியரும் அதற்கு முத்திரைபோடுவார்கள் என்றார்கள்.

நெகேமியா 5:12
அதற்கு அவர்கள் நாங்கள் அதைத் திரும்பக் கொடுத்துவிட்டு, இனி அப்படி அவர்களிடத்தில் கேட்கமாட்டோம்; நீர் சொல்லுகிறபடியே செய்வோம் என்றார்கள்; அப்பொழுது நான் ஆசாரியர்களை அழைத்து, அவர்கள் இந்த வார்த்தையின்படி செய்ய அவர்களை ஆணையிடுவித்துக்கொண்டேன்.

2 நாளாகமம் 23:16
அப்பொழுது யோய்தா தாங்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு, தானும் சகல ஜனங்களும் ராஜாவும் உடன்படிக்கை பண்ணிக்கொள்ளும்படி செய்தான்.

1 நாளாகமம் 11:3
அப்படியே இஸ்ரவேலின் மூப்பரெல்லாரும் எப்ரோனிலே ராஜாவினிடத்தில் வந்தார்கள்; தாவீது எப்ரோனிலே கர்த்தருக்கு முன்பாக அவர்களோடு உடன்படிக்கை பண்ணிக்கொண்டபின்பு, கர்த்தர் சாமுவேலைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள்.

2 இராஜாக்கள் 11:4
ஏழாம் வருஷத்திலே யோய்தா நூறு பேருக்கு அதிபதிகளையும் தலைவரையும் காவலாளரையும் அழைப்பித்து, அவர்களைத் தன்னிடத்தில் கர்த்தருடைய ஆலயத்திலே வரச்சொல்லி, அவர்களோடு உடன்படிக்கைபண்ணி, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்திலே ஆணையிடுவித்துக் கொண்டு, அவர்களுக்கு ராஜாவின் குமாரனைக் காண்பித்து,

உபாகமம் 29:1
ஓரேபிலே இஸ்ரவேல் புத்திரரோடே பண்ணிக்கொண்ட உடன்படிக்கையை அல்லாமல், மோவாபின் தேசத்திலே அவர்களோடே உடன்படிக்கைபண்ணிக் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் இவைகளே.

உபாகமம் 5:2
நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஓரேபிலே நம்மோடே உடன்படிக்கைபண்ணினார்.


Tags அப்பொழுது யோய்தா அவர்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு ராஜாவும் ஜனங்களும் கர்த்தரோடே உடன்படிக்கைபண்ணவும் ராஜாவும் ஜனங்களும் ஒருவரோடொருவர் உடன்படிக்கைபண்ணவும் செய்து
2 Kings 11:17 in Tamil Concordance 2 Kings 11:17 in Tamil Interlinear 2 Kings 11:17 in Tamil Image