யோபு 9

fullscreen1 அதற்கு யோபு பிரதியுத்தரமாக:

fullscreen2 ஆம், காரியம் இப்படியிருக்கிறது என்று அறிவேன், தேவனுக்கு முன்பாக மனுஷன் நீதிமானாயிருப்பதெப்படி?

fullscreen3 அவர் அவனோடே வழக்காடச்சித்தமாயிருந்தால், ஆயிரத்தில் ஒன்றுக்காகிலும் அவருக்கு உத்தரவு சொல்லமாட்டானே.

fullscreen4 அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்; அவருக்கு விரோதமாகத் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்தவன் யார்?

fullscreen5 அவர் பர்வதங்களைச் சடிதியாய்ப் பேர்க்கிறார்; தம்முடைய கோபத்தில் அவைகளைப் புரட்டிப்போடுகிறார்.

fullscreen6 பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் ஸ்தானத்தினின்று அசையப்பண்ணுகிறார்.

fullscreen7 அவர் சூரியனுக்குக் கட்டளையிட அது உதிக்காதிருக்கும்; அவர் நட்சத்திரங்களை மறைத்துப்போடுகிறார்.

fullscreen8 அவர் ஒருவரே வானங்களை விரித்து சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர்.

fullscreen9 அவர் துருவச்சக்கர நட்சத்திரங்களையும், மிருகசீரிஷத்தையும் அறுமீனையும், தட்சன மண்டலங்களையும் உண்டாக்கினவர்.

fullscreen10 ஆராய்ந்து முடியாத பெரியகாரியங்களையும் எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.

fullscreen11 இதோ, அவர் என் அருகில் போகிறார், நான் அவரைக் காணேன்; அவர் கடந்துபோகிறார் நான் அவரை அறியேன்.

fullscreen12 இதோ, அவர் பறித்துக்கொண்டுபோகிறார், அவரை மறிப்பவன் யார்? நீர் என்ன செய்கிறீர் என்று அவரைக் கேட்பவன் யார்?

fullscreen13 தேவன் தம்முடைய கோபத்தைத் திருப்பமாட்டார்; ஒருவருக்கொருவர் துணை நிற்கிற அகங்காரிகள் அவருக்கு அடங்கவேண்டும்.

fullscreen14 இப்படியிருக்க, அவருக்கு மறுமொழி கொடுக்கவும், அவரோடே வழக்காடும் வார்த்தைகளைத் தெரிந்துகொள்ளவும் நான் எம்மாத்திரம்?

fullscreen15 நான் நீதிமானாயிருந்தாலும் அவரோடே வழக்காடாமல், என் நியாயாதிபதியினிடத்தில் இரக்கத்துக்குக் கெஞ்சுவேன்.

fullscreen16 நான் கெஞ்ச, அவர் எனக்கு உத்தரவு அருளினாலும், அவர் என் விண்ணப்பத்துக்குச் செவிகொடுத்தார் என்று நம்பேன்.

fullscreen17 அவர் புசலினால் என்னை முறிக்கிறார்; முகாந்தரமில்லாமல் அநேகம் காயங்களை எனக்கு உண்டாக்குகிறார்.

fullscreen18 நான் மூச்சுவிட எனக்கு இடங்கொடாமல், கசப்பில் என்னை நிரப்புகிறார்.

fullscreen19 பெலத்தைப் பார்த்தால், அவரே பெலத்தவர்; நியாயத்தைப் பார்த்தால் என் பட்சத்தில் சாட்சிசொல்லுகிறவன் யார்?

fullscreen20 நான் என்னை நீதிமானாக்கிலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்; நான் உத்தமன் என்று சொன்னாலும், நான் மாறுபாடானவன் என்று அது சாட்சிகொடுக்கும்.

fullscreen21 நான் உத்தமனென்றாலும் என் உள்ளத்தை நான் அறியேன், என் ஜீவனை அரோசிப்பேன்.

fullscreen22 ஒரு காரியம் உண்டு, அதைச் சொல்லுகிறேன்; சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அவர் அழிக்கிறார்.

fullscreen23 சவுக்கானது அசுப்பிலே வாதித்துக் கொல்லும்போது, அவர் குற்றமில்லாதவர்களின் சோதனையைப்பார்த்து நகைக்கிறார்.

fullscreen24 உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது; அதிலிருக்கிற நியாயாதிபதிகளின் முகத்தை மூடிப்போடுகிறார்; அவர் இதைச் செய்கிறதில்லையென்றால் பின்னை யார் இதைச் செய்கிறார்.

fullscreen25 என் நாட்கள் அஞ்சற்காரர் ஓட்டத்திலும் தீவிரமாயிருக்கிறது; அவைகள் நன்மையைக் காணாமல் பறந்துபோம்.

fullscreen26 அவைகள் வேகமாய் ஓடுகிற கப்பல்களைப்போலவும், இரையின்மேல் பாய்கிற கழுகைப்போலவும் கடந்துபோகிறது.

fullscreen27 என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி, திடன்கொள்வேன் என்று சொன்னால்,

fullscreen28 என் வருத்தங்களைப்பற்றி பயமற்றவனாயிருக்கிறேன்; என்னைக் குற்றமில்லாதவனாக எண்ணமாட்டீர் என்று அறிவேன்.

fullscreen29 நான் பொல்லாதவனாயிருந்தால் விருதாவாய்ப் போராடவேண்டியது என்ன?

fullscreen30 நான் உறைந்த மழையைத் தண்ணீரில் முழுகி, என் கைகளைச் சவுக்காரத்தினால் சுத்தம்பண்ணினாலும்,

fullscreen31 நீர் என்னைச் சேற்றுப்பள்ளத்திலே அமிழ்த்துவீர். அப்பொழுது என் வஸ்திரமே என்னை அருவருக்கும்.

fullscreen32 நான் அவருக்குப் பிரதியுத்தரம் சொல்லுகிறதற்கும், நாங்கள் கூடி நியாயத்திற்கு வருகிறதற்கும், அவர் என்னைப்போல மனுஷன் அல்லவே.

fullscreen33 எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க மத்தியஸ்தன் எங்களுக்குள் இல்லையே.

fullscreen34 அவர் தமது மிலாற்றை என்னைவிட்டு அகற்றுவாராக; அவருடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக.

fullscreen35 அப்பொழுது நான் அவருக்கு பயப்படாமல் பேசுவேன்; இப்பொழுதோ அப்படிச் செய்ய இடமில்லை.